tear

கீழக்கரையில் டூவீலர் விபத்துக்களில் எத்தனை இழப்புகள்… எப்படி தடுப்பது ..

கீழக்கரையில் டூவீலர் விபத்துக்களில் எத்தனை இழப்புகள்… எப்படி தடுப்பது ..

ம்மா போய்ட்டு வர்ரேம்மா என தன் வீட்டு பிள்ளை பைக்கில் வெளியே செல்லும்போது தாய் “பார்த்து பத்திரமா சென்று வா வாப்பா” என்று எச்சரிக்கும் தாய், தனது மகன் மீண்டும் வீட்டிற்கு உயிரற்ற உடலாக திரும்ப வரும் போது எழும் தாய்மார உள்ளிட்ட பெற்றோர் உற்றார் உறவினர்களின் அழுகுரல் கீழக்கரையில் சோகமாக வருடா வருடா வருடம் ஒலித்து மனங்களை ரணமாக்கி கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்ற 4 பேர் உயிரழந்த பயங்கர விபத்து கீழக்கரை மக்களின் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று ஆற ரணமாக மாறி விட்டது .

ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கும் போது சாலை பாதுகாப்பு பற்றி பேசுவது பின் சில வாரங்களிலேயே அதனை மறந்து விடுவது என வாடிக்கையாகி விட்டது. இந்த பயங்கர விபத்துக்கு பிறகும் கீழக்கரை மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் எதிர்கால தலைமுறை வாழ்க்கை கேள்விகுறியாகும் என கீழக்கரை சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்

கீழக்கரை நகரில் தொடர்ச்சியாக டூவிலர் விபத்துக்களில் இளம் தளிர்களை இழந்து வருகிறோம் . அதிலும் டூ வீலர்கள் ராமநாதபுரம் – கீழக்கரை – ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது

பெரு நகரமாகி கொண்டிருக்கும் கீழக்கரை மக்கள் தொகைக்கு ஈடாக வாகனங்களும் அதிகரித்தபடி உள்ளது

குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் புற்றீசலென பெருகி விட்டது. பள்ளி சிறுவர்கள் வரை அதிகளவில் டூ வீலர்கள் உபயோகிப்பதை காண முடிகிறது. 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் அனுமதியின்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சில பெற்றோர்கள் சிலர் கண்டு கொள்வதில்லை. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் கூடுதலாக நண்பர்களை ஏற்றி கொள்வது , ஸ்டட்ன்டுகள் என பல செயல்களும் விபத்துக்கு காரணியாக அமைக்கிறது

4 பேர் உயிரழந்த இந்த சோக‌ சம்பவத்தில் ஒரே பைக்கில் 4 பேர் சென்றார்கள் என்பதை தாண்டி அவர்கள் பைக்கில் மோதிய மினி லாரி அசுர வேகமாக‌ வந்துள்ளதை குறிப்பிட்டாக வேண்டும் பைக்கில் மோதி சிறிது தூரம் சென்றே லாரி நிறுத்தப்பட்டுள்ளது லாரி டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார் அசுர வேகம் இந்த விபத்திற்கு முக்கிய காரணியாக இருந்துள்ளது

இப்பகுதியில் குறிப்பாக அதிகவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தவும் ,அத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க நவீன தொழில்நுட்ப (ஸ்பீடு ரேடார்) முறை புகுத்தப்பட வேண்டும். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை கண்காணிக்க ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு நவீன கருவி வழங்கப்பட வேண்டும் .இத்தகைய நவீன கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தால் வாகன ஓட்டுநர்களும் எச்சரிக்கையுடன் செயல்படுவர்.

தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துக்களில் மகன் விபத்தில் உயிரை விட்டுவிட்டான் என்று தான் தெரியும் பலருக்கு, இன்னும் சிலருக்குப் போதிய பாதுகாப்புக் கவசங்கள் அணியவில்லை என்றும் தெரியும், இன்னும் ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் மகனுக்குச் சாலை விதிகள் சரியாகத் தெரியாது என்பதும் தெரியும்.

இவையயல்லாம் மீறி அந்த விபத்திற்குக் காரணம் சாலை விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்றோ அல்லது எதிராளி சாலை விபத்தைத் தன் மகன் போன்று சாலை விதிகளைச் பற்றிச் சரிவர தெரியாதவரின் செயலால் விபத்து நடந்தது என்றோ, அல்லது சாலையைச் சரிவரப் பராமரிக்கத் தவறிய அரசோ, அல்லது வாகனத்தில் இயங்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்கவில்லை என்றோ சரிவர அறிய முடியாது.
இந்த விபத்தின் விபரங்களை நீதி மன்றத்தில் அதற்குரிய வல்லுநர்கள் வைத்து ஆராய்ந்தால் மட்டுமே, காரணம் சரிவரத் தெரிய வரும். “அதெல்லாம் தெரிந்து என்ன பயன்? என் மகன் தான் போய்ச் சேர்ந்து விட்டானே!” என்பர் மகனை இழந்த பெற்றோர். இது சராசரி பெற்றோரின் நிலை. அவர்கள் அனுபவித்த துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுவோர் பலர்

துரதிர்ஷ்டவசமாக, வேகத்துக்கு மிக மிக அவசியமான தன்னுணர்வையும், வேகம் அதிகரிக்கும்தோறும் இழந்து விடுகிறோம். ஆம், இதுவே நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்க முடியும். இழக்கும் தன்னுணர்வு, சாலை விதிகளை அறியும் சாத்தியத்தை அழித்து விடுகிறது. ஒருவேளை அறிந்திருந்தாலும், அந்த விதிகளை கடைபிடிக்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்து விடுகிறது. விதிவிலக்காக, ஓருவேளை சாலை விதிகளை கடைபிடித்தாலும், வேகத்தால் இழக்கப்படும் தன்னுணர்வு, எல்லா வித சுய கட்டுப்பாடுகளையும் இழக்க வைத்து, நம் இருப்பை முழுமையாக பௌதீக விதிகளின் செயல்களுக்கு அர்ப்பணித்து விடுகிறது

விபத்தில் பெரும்பாலும் இளைஞர்தான் சிக்கி கொள்கிறார்கள். . தான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்ஸிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர் ஆண்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ரேஸ் மனப்பான்மையை தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதிலும் கவனம் தேவை.

* விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம். வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, நிதானம் தேவை.

* வண்டியை எடுக்கும்போது ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியது மிக அவசியம்.

வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.
மொத்தத்தில் அரசாங்கம்,சட்டம், இவற்றை காட்டிலும் நமக்குதான் விபத்து ஏற்பட கூடாது என்ற பொறுப்புணர்வு அதிகம் இருக்க‌ வேண்டும் நமக்கு விபத்து ஏற்பட்டால அதிகம் பாதிக்கப்படுவது நம்முடன் இருப்பவர்கள்தான்

முன்னாள் எம் எல் ஏ ஹசன் அலி வெளியிட்டுள்ள செய்தியில்hasan ali

தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றொருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை மனம் மிகவும் வேதனையை தருகிறது.
16 வயது க்கு கீழ் பைக் ஓட்ட அனுமதிக்கும் தந்தைக்கு அபராதம் விதிக்க வேண்டும் இரவு நேரம் 10 மணிக்கு மேல் மாணவர்களை பைக்கில் வெளியில் செல்ல  அனுமதிக்க கூடாது  ,பள்ளிக்கு வரும் மாணவர்கள் பைக்கில் வரகூடாது என்ற தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்  மேலும் பைக்கில் 2 பேருக்கு மேல் வரகூடாது சிறுவர்கள் டூவீலர் ஓட்ட அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும இந்த 4 பேர் உயிரழப்பு சம்பவத்தை பாடமாக எடுத்து கொண்டு செயலபட வேண்டும் என்றார்

இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் கூறியதாவது

mmk mohidee
பள்ளிதோறும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . எங்கள் பள்ளியில் யாரும் பைக்கில் வரகூடாது என்ற உத்தரவை பின்பற்றி வருகிறோம். பைக்கில் வரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதையும் மீறி சில மாணவர்கள் பள்ளிக்கு தொலைவிலு வாகனத்தை நிறுத்தி விட்டு வருகின்றனர், இதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள தான் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையினர் அபராதம் மட்டும் விதிக்காமல் வாகனத்தை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் போன்ற விபத்துக்களை தவிர்க்க தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டிய முக்கிய தருணமிது உடனடியாக காவல்துறை, போக்குவரத்து அதிகாரி, கீழக்கரை ஜமாத்கள் ,சமூக நல அமைப்புகள் உடனடியாக ஒன்று கூடி விபத்துக்களை தடுக்க‌ இதற்கு நல்ல தொரு நீண்ட கால திட்டம் ஒன்றை தீட்ட வேண்டும். சட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடியும். ஜமாத் மற்றும் பிற அமைப்புகளால் கட்டுப்படுத்த முடியாது என்றார்

கீழக்கரை ஜமீல் கூறியாதவதுjameel88

சமீபத்தில் நடந்த விபத்து மனதை பிழிகிறது கீழக்கரையில் 20 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பைக் கொடுக்க கூடாது என்ற அனைத்து தரப்பினரும் முடிவு எடுக்க வேண்டும் ஊரில் உள்ள அனைத்து ஜமாத்தும் இணைந்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றார்

இது குறித்து சமூக ஆர்வலர் அலி பாட்சா கூறியாதாவதுali batch

இந்த சோக மயமான நேரத்தில் கீழக்கரையில் கல்விச்சாலைகளை நிர்வகிக்கும் பெருந்தகைகளுக்கு எந்தன் கண்ணீருடன் கூடிய கோரிக்கை: கீழக்கரையில் 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதும். இரு சக்கர வாகனதில் 3,4 பேர் பயணிப்பதும் ஊர் முழுக்க புரையோடிப் போன விஷயமாக இருப்பதால் வாராவாரம் கட்டாயமாக மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கவுன்ஸிலுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.முடிந்தால் கோர விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்களையும் சேவை நாட்டம் உள்ள நம்தூர் டி எஸ் பி மஹேரிஸவரி காளியப்பன் ஐ பி எஸ் அவர்களையும் அழைத்து கவுன்ஸிலிங்கில் உரை ஆற்றச் சொல்லுங்கள்.

இதில் முயற்சியின் தோல்விக்கோ சலிப்புக்கோ நிச்சயமாக இடமில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள். என்றார்

கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்Mohaideen Ibrahim

www. keelakaraitimes.com

இந்த விபத்து நடைபெறுவதற்கு முன் இரவு இரண்டு பைக்குகளில் ஒரு பைக்கில் 3 பேரும் மற்றொரு பைக்கில்(விபத்தில் சிக்கிய) 4 பேரும் முக்கு ரோடு வழியாக ஏர்வாடி சென்ற இவர்களை கீழக்கரை காவல்துறையினர் இத்தனை பேர் பைக்கில் போக கூடாது என எச்சரித்து திருப்பி அனுப்பி உள்ளனர் ஆனால் அவர்கள் திரும்பி சென்று முள்ளுவாடி சாலை வழியாக ஏர்வாடி சென்று விபத்தில் சிக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது

அதே போன்று ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தால்,அதேபோன்று சிறுவர்கள் பைக் ஓட்டுவதை போலீசார் தடை வித்தித்தால் ஒத்துழைப்பு தருவதில்லை யாரையாவது முக்கிய பிரமுகரை அழைத்து கொண்டு போலீசாரிடம் மல்லுகட்டுகிறார்கள். காவல்துறையோடு முழு ஒத்துழைப்பு தர வேண்டு அப்போதுதான் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றார்

முன்னாள் கவுன்சிலர் கீழை அரூசி வெளியிட்டுள்ள செய்தியில்jahangeer

பிள்ளை ஆசைப்பட்டதும் கடன் பட்டாவது பைக் வாங்கி கொடுத்து விடும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பைக் மட்டும் வாங்கி கொடுப்பதில்லை.கூடவே இஸ்ராயீல்(அலை)அவர்களின் நட்பையும் இணைத்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மனப்பக்குவமில்லா பிள்ளைகளுக்கு தற்போதைய போக்குவரத்து சூழலில் பைக் வாங்கி கொடுப்பது பேராபத்து என்பதை உணர மறுக்கும் பெற்றோர்களே….ஒருமுறை இழப்பானாலும் தம் வாழ்நாள் முழுவதும் நம்மை அது பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் பைக் அதிகமாகவும் கார்கள் குறைவாகவும் ரோடுகளில் ஓடிய நிலை மாறி இன்று கார்கள் அதிகமாகவும் பைக் குறைவாகவும் ஓடும் காலமிது.
கார்கள்,லாரிகள்,பேரூந்துகள் அதிகமாகி ஒன்றுக்கொன்று முந்தி செல்லும் சூழலில் பைக்கில் செல்பவர்களை கண்டு கொள்ளாத அபாயகரமான சூழலில் நமது பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுப்பது சரியா?என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.
நமது பிள்ளைகளும் பைக்கில் செல்லும் போது நடுரோட்டில் அளவுக்கு அதிகமான வேகத்தில் பைக் ஓட்டும் குலை நடுங்கும் சாகசம் கண்டு ஒவ்வொரு முறையும் நமக்கே உயிர் போய் வருவது போல் இருக்கிறது.
இனிவரும் காலங்களிலாவது அல்லாஹ் அனைத்து மக்களையும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பானாக. என்றார்

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *