Admin 1

கீழக்கரையில் எழுத்தறிவு பெற்றோர் 93.31 சதவீதம்! மாநில சராசரியைவிட அதிகம்!

kilakarai

  சமீபத்தில் வெளியிட்ட 2011 கணக்கெடுப்பின் படி கீழக்கரையில் எழுத்தறிவு பெற்றோர் சதவீதம் 93.31 ஆகும். இது மாநில சராசரியான 80.09 % விட கூடுதலாகும். ஆண்களில் 96.24 % சதவீதமும் பெண்களில் 90.20 % சதவீதமும் எழுத்தறிவு பெற்றுள்ளார்கள். கணக்கெடுப்பின் படி  கீழக்கரையின் மக்கள் தொகை 38,355 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 19,685 ஆண்களும் 18,670 பெண்களும் உள்ளார்கள். 7,448 வீடுகளை கொண்ட கீழக்கரை 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை நகராட்சிக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. கீழக்கரை நகராட்சியில் …

Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது.? இந்திய பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

pp

சர்வதேச அளவில் முன்கூட்டியே விசா பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்டுள்ள நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ற இணையத்தளம் சர்வதேச அளவில் விமான பயணங்கள் மேற்கொள்வதில் 80 நாடுகளுக்குரிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பற்றிய ஆய்வை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும்  சமமான புள்ளிகள் பெற்று அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்டுள்ள நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்விரு நாடுகளிலிருந்தும் முன்கூட்டியே விசா பெறாமல் 147 நாடுகளுக்கு பயணம் …

Read More »

இந்தியாவில் 75,000 இளைஞர்கள் விபத்தில் பலி!

accident1

இந்தியாவில் 2014 ல் நடைபெற்ற சாலை விபத்துகளில் 15க்கும் 34க்கும் இடையிலான 75,000 இளைஞர்கள் பலியானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 82 சதவீதம் பேர் ஆண்கள். நாடு  முழுவதும் ஏற்பட்ட  விபத்துகளில் மொத்தம் பலியான 1,39,671 பேரில் 53.8 சதவீதம் பேர் 15திற்கும் 34க்கும் இடையிலான வயதுடையோர், 35திற்கும் 64க்கும் இடையிலான வயதுடையோர் 35.7 சதவீதம். மொத்தம் நடை பெற்ற 4.89 லட்சம் விபத்துகளில் உத்திரபிரதேசம்  முதலாவதாகவும் , தமிழ்நாடு இரண்டாவதாகவும் , மஹாராஷ்டிரா மூன்றாவதாகவும் உள்ளது. இதில் டூவீலர் விபத்துகள் 23.3 …

Read More »

ராமநாதபுரத்தில் இன்று (8/8/2015) தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் : பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

ramnad collector office

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொழில் முதலீட்டாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை :   தமிழக முதல்வர் தலைமையில் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழகத்தில் ஏற்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. …

Read More »

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் ( முழு வீடியோ )

apjkalam

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்  ( முழு வீடியோ )  

Read More »

இன்று (02/06/15) கீழக்கரையில் புனித பராஅத் இரவு!

baraath

இன்று (02/06/15) புனித பராஅத் இரவு கீழக்கரை பள்ளிவாசல்களில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதன் தொடர்பாக அனைத்து பள்ளிவாசல்களிலும்  மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்படும். இஷா தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான் மற்றும் தஸ்பீஹ் தொழுகை நடைபெறும். கீழக்கரை ஓடக்கரைப் பள்ளியில் மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்பட இருக்கிறது, இஷா தொழுகைக்குப் பிறகு நாகை மாவட்டம் நீடுர் மிஷ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி ஹாபிழ் புஹாரி மெளலானா அன்வாரி எம்.ஏ., …

Read More »

விரைவில் மதுரை – ராமநாதபுரம் ஹெலிகாப்டர் சேவை!

pawan-hans-helicopter

ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்வையிடும் புதிய திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு நிறுவனமான பவன் ஹான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. சண்முக நாதன், செயலாளர் கண்ணன், சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் ஆணையாளர் ஹர்சகாய் மீனா, ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி, திருப்பதி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் …

Read More »

கீழக்கரை நகராட்சி மற்றும் சுற்று கிராமங்களில் நாளை மின்தடை!

power

கீழக்கரை உபமின் நிலையத்தில்  நாளை சனிக்கிழமை (மே 9ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை, அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மதுசதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய          கிராமங்களில் மின்விநியோகம் தடைபடும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்

Read More »

தமிழக பிளஸ் 2 கல்வி மாவட்ட லிஸ்டில் முதன்முறையாக துபாயும் சேர்ந்தது! துபாய் மாணவர்கள் 95% வெற்றி! மாவட்ட வாரியாக தேர்வு விகிதம்!!

dubai sun set

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின.அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் …

Read More »

இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!

exam12

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7)  வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதற்கான இணையதளங்கள்: www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in – ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை …

Read More »