எங்களைப் பற்றி

அன்பார்ந்த வாசகர்களே,

 உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கீழக்கரை மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக, கீழக்கரை மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.

எனவே, இந்த இணையதளத்தில் வெளியிடும் தகவல்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.

தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது.

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது.

கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது.

பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது.ள்வது.

இந்த தளத்தில் கீழக்கரையின் அனைத்து விவரங்களையும் வெளியிட முயன்று வருகிறோம். எனவே செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் என அனைத்தையும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள். ஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.

(இந்த தளத்தில் நீங்கள் இதுவரை நண்பராகப் பதிவு செய்யவில்லையெனில் உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்)

உங்கள் படைப்புகள் :

ஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும்.

தமிழில் தகவல்கள் அனுப்பும் போது பயன்படுத்துங்கள்.

எந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது.

பொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக்கூடாது.

நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

கீழக்கரை டைம்ஸ்

ஹமீது யாசின் – நிறுவனர்

குத்புதீன் ராஜா – நிர்வாகி

 

தொடர்பு கொள்ள மற்றும் உங்களை செய்திகளை வெளியிட : keelakaraitimes@yahoo.com