1.36 நிமிடத்தில் 50 கார்களின் பெயர்கள் .. ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 வயது சிறுவன் சாதனை

awaaa awa33 awa322 awa333
1.36 நிமிடத்தில் 50 கார்களின் பெயர்கள் : ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 வயது சிறுவன் சாதனை
ராமநாதபுரம் மாவட்டம் வழுதுார் பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுவன் 50 கார்களின் மாடல்களை 1.36 நிமிடத்தில் தெரிவித்து சாதனை படைத்தார். வழுதுாரை சேர்ந்தவர் ராஜேஷ், இவரது மனைவி ஜீவிதா. இந்த தம்பதியரின் மகன் ஆர்.சுகின் தேவ்,4,. இவர் பாரதி நகர் கிட்கேர் இண்டர்நேஷனல் பள்ளியில் யு.கே,.ஜி., படித்து வருகிறார். இவர் கார்களை பார்த்தவுடன் அதை தயாரித்த நிறுவனம், மாடல் என்பதை கண்டறிந்து உடனுக்குடன் தெரிவிக்கும் திறமை படைத்துள்ளார். இவரது திறமை ‘இந்தியன் புக் ஆப் அச்சீவர்’ என்ற இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த சாதனை படைத்த அவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்திய  சாதனை புத்தக யின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.கலைவாணி, துணை ஒருங்கிணைப்பாளர் தஹ்மிதா பானு ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.

 

சிறுவனின் தந்தை ராஜேஷ் தெரிவித்ததாவது: ஒன்னே முக்கால் வயதில் சுகின்தேவ் கார்களின் அமைப்பை பார்த்தவுடன், அந்த கார் எந்த நிறுவனத்தை சேர்ந்தது, அதன் மாடல் என்ன என்பதை தெரிவித்தார். இதனை ஊக்கப்படுத்தியதன் விளைவாக இன்று 1.36 நிமிடத்தில் 50 கார்களின் நிறுவனம், மாடல் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து சாதனை படைக்க எனது மகனை ஊக்கப்படுத்துவோம், என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *