demage elc post kilakarai_3

கீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில் நடவடிக்கை!

கீழக்கரையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மின் புனரமைப்பு பணிகள் துவங்குவதாக அறிவித்தனர். பல மாதங்களாகியும் பணி துவங்குவதில் தாமதமாவதால், மக்கள் தொடர்ந்து மின்தடையில் சிக்கி தவிக்கின்றனர்.கீழக்கரையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

இங்கு 1992ல் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. 20 ஆண்டுகளில் மின்சார தேவை அதிகரித்தும், நகருக்குள் எவ்வித மின்மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை. துணை மின் நிலையம் துவங்குவதற்கு முன் பொருத்தப்பட்ட மின்கம்பிகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. அடிக்கடி பழுதடைந்து, மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்தாண்டு கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் துணை மின் நிலையத்தில் அமைக்கப்பட்டது. இருப்பினும் நகரில் உள்ள பல்வேறு இடங்களில்,டிரான்ஸ்பார்மரில் அதிகமான இணைப்புகள் வழங்கியதால், திறன் இழந்து மின்தடை ஏற்படுகிறது.வள்ளல் சீதக்காதி சாலை, கிழக்குத்தெரு, வடக்கு தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன. லேசான காற்றுக்கு கூட தாங்க முடியாமல் மின் கம்பிகள் அறுந்து விடுகின்றன. மேலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது:
மத்திய அரசின் மின் புனரமைப்பு திட்டத்தில், கீழக்கரையில் மின் மேம்பாட்டு பணிகள், ரூ.2.50 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

புதிய திட்டத்தில் கூடுதலாக 110 கேவிஏ டிரான்ஸ்பார்மர், 29 இடங்களில் அமைக்கப்படுகிறது. 600க்கும் அதிகமான மின் கம்பங்கள் மாற்றப்படும். பழுதடைந்த மின்வயர்கள் அகற்றி புதிய வயர்கள் பொருத்தப்படும். இப்பணி ஜனவரியில் துவங்கும், என்றார்.

பழைய படம்

demage elc post kilakarai_3

Comments

comments

One comment

  1. All the best keelakkaraitimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *